எண்ணூருக்கு அழிவே இந்த சாம்பலினால் தான்! | குட்டி Documentaries | Asiaville Tamil
தமிழக அரசின் வடசென்னை அனல் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்ட எண்ணூரை அடுத்த சில கிராமங்களின் நிலையை விவரிக்கிறது இந்த குட்டி Documentary.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்களுடன் தினமும் இந்த சாம்பலில் வாழ்வது எப்படி என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தினம், தினம் நாங்கள் அவதிக்குள்ளாகுகிறோம், இனியும் இங்கு வாழ முடியாது என்கிறார் பட்டு. 90 வயது நெருங்கிய மூதாட்டி பட்டு எண்ணூரை அடுத்த செப்பாக்கத்தில் வசிக்கிறார்.
தமிழக அரசின் வடசென்னை அனல் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்ட எண்ணூரை அடுத்த சில கிராமங்களின் நிலையை விவரிக்கிறது இந்த குட்டி Documentary. 25 வருடமாக இங்கு சாம்பலை நிரப்பி வருகிறது அனல் மின் நிலையம், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை திரும்ப பெற முடியாமல் தடுமாறி வருகின்றனர். இந்த சாம்பல் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுப்படுத்தி, காற்று மாசின் அளவைக்கூட்டியதோடு, எண்ணூரின் முக்கியமான ஆறான கொசஸ்தலையாற்றையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. இந்த குட்டி Documentary குறித்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
