கொரோனா பெருந்தொற்றால் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களை மீட்டெடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகபடுத்தி செயல்படுத்திவருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் (மார்ச் 21) சென்னை தீவு திடலில் 'நம்ம ஊரு திருவிழா' என்கிற நிகழ்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு பாரம்பரியகலை நிகழ்சிகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில கலைஞர்களை பற்றி பேசுகிறது இந்த Ground Report.